Terrible landslide Near Munnar  : கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையால் மூணாறு அருகே பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் பலர் சிக்கிய உள்ள நிலையில், 17 பேர் இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர் அதில் நிலச்சரிவில் சிக்கி 12 பேர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் மண்ணில் புதையுண்ட அவர்களில் 17 பேர் இறந்த நிலையில் மீட்கப்பட்டனர்.

கேரளாவில் விமானம் இரண்டாக பிளந்து விபத்து!!! தமிழர்கள் பலி!!

நிலச்சரிவால் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியின் கீழ் தலா ரூபாய் 2 லட்சம் வீதமும், காயமுற்ற அவர்களுக்கு தலா ரூபாய் 50 ஆயிரம் வீதமும் கருணை தொகையாக வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று, நிலச்சரிவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ 5 லட்சம் இழப்பீடு கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவை மாநில அரசே ஏற்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

கேரள மாநில மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க வேண்டும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் முதல்வர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.