Temporary Teaching
Temporary Teaching

Temporary Teaching – சென்னை: ஜாக்டோ- ஜியோ அமைப்பில் போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வராத ஆசிரியர்களை மிரட்டி பணிக்கு வரவழைக்க தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பை வெளியிட்டு தங்களை ஏமாற்றிவிட்டதாக பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.

இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது போன்ற 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் கடந்த 22-ஆம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

எனவே வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

மேலும் மாதம் ரூ.10,000 சம்பளம் வழங்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டதன் காரணமாக, ஆயிரக்காணோர் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்திருந்தனர்.

இந்நிலையில், தமிழக அரசு அவ்வாறு அறிக்கை வெளியிட்டு இருந்தும், தற்காலிக ஆசிரியர்கள் ஒருவர் கூட அரசு மூலம் நியமிக்கப்படவில்லை.

இந்நிலையில், விண்ணப்பித்தோர் கூறுகையில்,”ஏற்கனவே வேலையின்றி நாங்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் அரசு இவ்வாறு வேலை தருவதாக கூறி எங்களை ஏமாற்றுவது தமிழக அரசுக்கு அழகு அல்ல” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.