Temporary teachers
Temporary teachers

Temporary teachers – சென்னை: ஜாக்டோ ஜியோ அமைப்பின் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்சமயம், தற்காலிக ஆசிரியர்கள் இன்று முதல் பணியமர்த்தப்படுகின்றனர்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து, 2004-இல் ரத்து செய்யப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது போன்ற 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 22-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.,

இந்நிலையில், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாகவும், ஆசிரியர்களின் தேவையை கருத்தில் கொண்டும் தமிழகத்தில் தற்காலிகமாக ஆசிரியர்கள் பணியில் அமர்த்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.,

மேலும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ரூ.10,000 சம்பளம் என அறிவிக்கப்பட்டுள்ளதால், ஏராளமானோர் போட்டிபோட்டு கொண்டு விண்ணப்பித்து வருகின்றனர்.

இதனிடையே இந்த நியமனம் முற்றிலும் தற்காலிகமானது என்று பணி நியமன ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் அரசு வேலைக்கு எந்த முன்னுரிமையும் அளிக்கப்படாது என்று அரசு அறிவிக்கும் போது உடனடியாக எவ்வித முன்னறிவிப்புமின்றி பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ‘தேர்ந்தெக்கப்பட்ட தற்காலிக ஆசிரியர்கள், இன்று முதல் பணியில் அமர்த்த உள்ளனர்.

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன’ என்பது குறிப்பிடத்தக்கது.