தல அஜித்தை ஸ்பாட்டுக்கு கூட்டு சேர்ந்து ஆட்டம் போட்டுள்ளனர் தெலுங்கு நடிகர்கள்.

Telungu Actors Dance to Ajith Song : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தினை எச் வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

வேர்ல்டு கப் மேட்சில், இடம் பெறும் வீரர்கள் யார் யார்? : ஐசிசி அறிவிப்பு

படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரோஷி நடித்துள்ளார். மேலும் விஜய் டிவி புகழ், யோகி பாபு என பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக நாங்க வேற மாதிரி பாடல் வெளியாகி யூடியூபில் பல்வேறு சாதனைகளை படைத்தது.

வலிமை படத்திற்காக அஜித் வாங்கிய சம்பளம் – Latest Update…! | Ajith | Valimai | Boney Kapoor | Tamil

இந்த நிலையில் தற்போது தெலுங்கு இயக்குனர் ராஜமவுலியின் மகன் திருமணத்தில் நடிகர் பிரபாஸ் ஆலுமா டோலுமா பாடலை பாடச் சொல்லி கேட்டு உள்ளார். இந்த பாடலுக்கு பிரபாஸ், ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர், ராம்சரண் என பலரும் இணைந்து செம குத்தாட்டம் போட்டு உள்ளனர்.

இவர்கள் நடனமாடிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் செம வைரலாகி அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.