நாளை லவ் டுடே திரைப்படத்தின் தெலுங்கு ட்ரெய்லர் வெளியாக உள்ளது.

கோமாளி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அவரே இயக்கி கதாநாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் லவ் டுடே. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுடன் இணைந்து ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, இவானா, விஜய் வரதராஜ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

நாளை வெளியாகும் லவ் டுடே திரைப்படத்தின் தெலுங்கு ட்ரெய்லர்!!… உற்சாகத்தில் ரசிகர்கள்!.

கடந்த நவம்பர் 4ஆம் தேதி திரையரங்கில் வெளியான இப்படம் ரசிகர்களின் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு டிரெய்லரை பிரபல நடிகர் விஜய் தேவரகொண்டா நாளை மதியம் 12.10 மணிக்கு வெளியிட இருக்கிறார். இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இப்படம் தெலுங்கில் வரும் நவம்பர் 18ம் தேதி வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.