Teeth Shine White : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

 Teeth Shine White :

உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள், உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை போன்ற பல்வேறு காரணங்களால் பற்களில் கரை ஏற்படுவதுண்டு.

1) கொய்யாப் பழம் மற்றும் கொய்யா இலைகள் இரண்டுமே பற்களின் கரையை போக்க கூடியது.

2) ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் சி நிறைந்து இருப்பதனால், இதனை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக அரைத்து தினமும் காலை பல் துலக்கியவுடன் பற்களில் லேசாக பத்து நாட்கள் தொடர்ந்து தேய்த்து விட நல்ல பலன் கிடைக்கும்.

3) இரவு படுப்பதற்கு முன்பாக ஆரஞ்சு பழத் தோலைக் கொண்டு பற்களை நன்றாக தேய்த்து மறுநாள் காலை எழுந்து வாயைக் கொப்பளித்தால் பற்களில் கறை மறைந்துவிடும்.

4) ஒரு டீஸ்பூன் கிராம்பு பொடியுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து பற்களில் தேய்த்து வர சிறிது நேரத்திற்குப் பின் வெதுவெதுப்பான நீரில் வாயைக் கொப்பளித்து விட பற்களின் கறை மறையும்.

5) தினமும் கற்றாழை ஜெல்லை கொண்டு பற்களை தேய்க்க பற்களில் உள்ள கறை மறையும்.

அஜீரணம் வராமல் இருப்பதற்கு பெயர் போன பெருங்காயத்தின் நன்மைகளைப் பார்ப்போமா?

6) உணவு சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரம் கழித்து ஒரு துண்டு ஆப்பிள் சாப்பிட்டு வர பற்கள் ஆரோக்கியமானதாக இருக்கும். பற்களில் கறை படிவது தடுக்கப்படும்.

7) உணவு உட்கொண்ட பிறகு சிறிதளவு சீஸ் எடுத்து வாயில் போட்டு வைத்துக் கொள்ள, சீஸ் பற்களின் மேல் ஒரு படலத்தை உண்டாக்கி பற்களில் கறை படிவதைத் தடுத்து விடும்.

8) ஒரு சொட்டு ரோஸ்மேரி ஆயில் ஒரு டேபிள் ஸ்பூன் நீரில் கலந்து வாய் கொப்பளித்து, பின்னர் பல் துலக்கினால் பற்களில் கறை மறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here