Teddy Movie Review

ஆர்யா, சாயிஷா இணைந்து நடித்துள்ள டெடி படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Teddy Movie Review : தமிழ் சினிமாவில் பேன்ட்டஸி படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் சக்தி சிதம்பரம். இவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் தான் டெடி‌. இம்மான் இசையமைத்துள்ள இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

ஆர்யா திறமையான மனிதர். எதையும் எளிதில் புரிந்து கொள்பவர். படத்தின் நாயகியான சாயிஷா கல்லூரிக்குச் சென்ற போது ஒரு கும்பல் கடத்தி அவரை மருந்துகளைக் கொடுத்து கோமா நிலைக்குத் தள்ளிவிடுகிறது. சாயிஷாவின் உயிர் மட்டும் ஒரு டெடி பொம்மைக்குள் புகுந்து விடுகிறது.

அந்த பொம்மை நடிகர் ஆர்யாவைச் சந்தித்து தனக்கு ஏற்பட்ட பிரச்சினையை சொல்கிறது. உடனே ஆர்யா அந்த டெடிக்கு உதவ முயல்கிறார். எப்படி உதவுகிறார். என்னவெல்லாம் நடக்கிறது என்பது தான் படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

ஆர்யா, சாயிஷா ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

இசை :

இம்மானின் பின்னணி இசையும் பாடல்களும் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளன.

இயக்கம் :

சக்தி சிதம்பரத்தின் மற்ற படங்களோடு இந்த படத்தினை ஒப்பிடுகையில் நிறைய இடங்களில் கோட்டை விட்டுள்ளார். கதை, திரைக்கதை என அனைத்திலும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.

REVIEW OVERVIEW
டெடி படம் எப்படி இருக்கு? - முழு விவரம் இதோ !!
teddy-movie-reviewமொத்தத்தில் டெடி குழந்தைகளுடன் ஒருமுறை பார்க்கலாம்.