Teachers Control
Teachers Control

Teachers Control – சென்னை: ஜாக்டோ- ஜியோ போராட்டம் தொடர்ந்து இன்றும் நடந்து வரும் நிலையில், அரசால் நியமிக்கப்பட உள்ள தற்காலிக ஆசிரியர்களுக்கு திடீர் கட்டுப்பாடு விதித்து பள்ளிக்கல்வித்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

2004-இல் ரத்து செய்யப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது போன்ற 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 22-ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தற்காலிகமாக பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வி துறை ஏற்பாடு செய்துள்ளது.இந்நிலையில்,தற்காலிக ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சில கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது.

* பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பணியமர்த்தப்படும் நபர்கள் அந்தந்த பணியிடத்திற்குரிய கல்வித் தகுதியுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் பணியமர்த்தப்படும் நபர்கள் அந்தந்த பணியிடத்திற்குரிய கல்வித் தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

* பள்ளி அருகாமையில் உள்ளோருக்கு முன்னுரிமை அளிக்கலாம். மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களைப் பணியமர்த்த முன்னுரிமை வழங்க வேண்டும்.

* உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பணியமர்த்தும் ஆணைகளை முதன்மைக்கல்வி அலுவலர் இசைவுடன் வழங்க வேண்டும்.

* பணியமர்த்தும் ஆணையில் முற்றிலும் தற்காலிக அடிப்படையில் மாதத்திற்கு ரூ.10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்படும்.

* முக்கியமாக, இதனைக் கொண்டு அரசின் வேலைவாய்ப்பிற்கு எத்தகைய உரிமையும், முன்னுரிமையும் கோர முடியாது.

இதுபோன்ற கட்டுப்பாடுகளை பள்ளிக்கல்வி துறை, தற்காலிக ஆசிரியர்களுக்கு அதிரடியாக விதித்துள்ளது.