ரிஷப ராசி பலன்கள்

Taurus Benefits 2019 : எப்போதும் தன்னை அழகாக காட்டிக்கொள்ள விரும்பும் ரிஷப ராசிக்காரர்களுக்கு 2019 இந்தப் புத்தாண்டு, சிறந்த ஆண்டாக அமையும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த சச்சரவுகள் நீங்கி, ஒற்றுமை அதிகரிக்கும்.

சென்ற ஆண்டு வரை தடைபட்டுக் கொண்டிருந்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும்.

புத்திரபாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திரபாக்கியம் உண்டாகும். ஒரு சிலருக்கு புதிதாக வீடு, மனை, சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு.

உங்களது உடல் ஆரோக்கியம் சிறிது குறையும். எனவே இந்த வருடம் உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துதல் அவசியம். உணவு பழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும்.

2019 ராசிபலன் படி, இவ்வருடம் நாள்பட்ட உடல் பாதிப்புக்கள் ஏற்படலாம். வருட ஆரம்பத்திலேயே உங்களது வேலை தொடர்பான சில சிக்கல்கள் ஏற்படக்கூடும்.

தொழிலில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், கடின உழைப்பால் அதனை சரிசெய்து நற்பலன்களைப் பெறலாம்.

பொருளாதார நிலை எப்போதையும் விட சிறப்பாகவே இருக்கும். உங்களது பொருளாதார நிலை உயர்ந்தாலும், செலவுகளும் அதிகரிக்க வாய்ப்புண்டு.

செலவுகளை குறைக்காவிட்டால் உங்களது தற்போதைய பொருளாதார நிலை பாதிப்படையக்கூடும். உங்களது வருமானம் இந்த வருடம் உயர வாய்ப்புள்ளது.

அரசியலில் இருப்பவர்களுக்கு ஏற்ற இறக்கமான பலன்களே ஏற்படும். விவசாயிகளுக்கு விளைச்சல் அதிகரிக்கும்.

கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வெளியூர், வெளிநாடு பயணங்கள் செல்லும் நிலை ஏற்படும். புது வாகனங்கள் வாங்குவீர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here