TATA With Apple

ஐபோன் உதிரி பாகங்களை தயாரிக்க டாடா நிறுவனம் 5 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருப்பதாகவும் இதற்காக தொடங்கப்படவுள்ள புதிய தொழிற்சாலை மூலம் 18 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

TATA Join With Apple : ஐபோன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்திற்கான பாகங்களை தயாரிக்கும் வகையில் டாடா குழுமம் ரூ .5,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

டாடா எலெக்ட்ரானிக்ஸ் என்ற புதிய நிறுவனம், ஓசூரில் உள்ள தொழில்துறை வளாகத்தில் உள்ள உற்பத்தி ஆலைக்கு TIDCO (தமிழ்நாடு தொழில்துறை மேம்பாட்டுக் கழகம்) 500 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது.

டாடா குழுமத்தின் முதலீடு பின்னர் ஆதாரத்தின் அடிப்படையில் ரூ .8,000 கோடியாக உயர்த்தப்படலாம் என்று அவர்களது அறிக்கை தெரிவித்துள்ளது.

அறிக்கையின்படி டாடா குழுமமோ அல்லது தமிழக அரசோ இந்த வளர்ச்சியை உறுதிப்படுத்தவில்லை.

டைட்டனின் ஒரு பிரிவான டைட்டன் இன்ஜினியரிங் மற்றும் ஆட்டோமேஷன் (டீல்) உற்பத்தி வசதியை அமைப்பதற்கான நிபுணத்துவத்தை வழங்கும் என்றும் வெளியாகியுள்ள அறிக்கை தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையின் படி, இந்த தொழிற்சாலையின் பூமி பூஜை கடந்த அக்டோபர் 27 அன்று நடைபெற்றது.

அக்டோபர் 2021க்குள் உற்பத்தி ஆலையில் 18,000 ஊழியர்கள் இருப்பார்கள், அவர்களில் 90 சதவீதம் பெண்களாகவே இருப்பார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆப்பிளின் ஒப்பந்த உற்பத்தியாளர் ஃபாக்ஸ்கான் ஏற்கனவே ஐபோன் 11 ஐ தமிழ்நாட்டின் ஸ்ரீபெரம்புதூரில் உள்ள ஒரு ஆலையில் உருவாக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.