Vegetable Cutlet

தேவையான பொருட்கள்:
உருளை கிழங்கு – 1,
கேரட்,பீன்ஸ் – 1 கப்,
பட்டாணி – 1/4 கப்,
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி – 2 துண்டு,
கொத்துமல்லி – சிறிதளவு,
மைதா – 3 ஸ்பூன்,
ப்ரெட் க்ரம்ஸ் – 1 கப்,
உப்பு – சிறிதளவு.

செய்முறை :

1) முதலில் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பட்டாணி இவைகளை வேக வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை நறுக்கிக் கொள்ளவும்.
2) வேகவைத்த காய்கறிகள், பச்சைமிளகாய், இஞ்சி, கொத்துமல்லி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகப் பிசையவும்.
3) உங்களுக்கு விருப்பமான வடிவில் கட்லெட்டுகளை செய்து வைக்கவும்.
4) மைதா மாவுடன் தேவையான அளவு நீர் சேர்த்து நீர்க்கக் கரைத்து கொள்ளவும்.
5) நமக்குத் தேவையான வடிவில் செய்து வைத்த கட்லெட்டுகளை மைதா மாவில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி
மிதமான சூட்டில் எண்ணெயை காயவைத்து கட்லெட்டுகளைப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
6) டொமாட்டோ கெச்சப்புடன் பரிமாறவும். சுவையான வெஜிடபிள் கட்லெட் ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here