Tasty Chicken Vada
Tasty Chicken Vada

Tasty Chicken Vada :

இன்றைய குழந்தைகளை மிச்சம் வைக்காமல் சாப்பிட வைப்பது என்பது மிகவும் கடினமான காரியமாகிவிட்டது. குழந்தைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிடும் ஒரு ஸ்‌னாக்ஸ் இதோ, ‌

தேவையான பொருட்கள் :

சிக்கன் – 150 கிராம்
வெங்காயம் – 2
பிரட் தூள் – 1 கப்
கரம் மசாலா – 1 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – ½ ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவைக்கு

செய்முறை :

சிக்கனை நன்றாக மிக்ஸியில் போட்டு கட்டி இல்லாமல் மசித்துக் அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன், கரம் மசாலா, இஞ்சி-பூண்டு விழுது, பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி, அதில் தயார் செய்த சிக்கனை வடை போற்று உருண்டையாக செய்து எண்ணெய் சூடானதும் அதில் போட்டு எடுத்தால் சுவையான சிக்கன் வடா தயார்.

மாலை நேரங்களில் பள்ளியில் இருந்து குழந்தைகள் வந்த பிறகு இப்படி செய்து கொடுத்தல் குழந்தைகள் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here