தமிழ் சரஸ்வதியின் சீரியலில் முதலிரவு பற்றி டபுள் மீனிங் காட்சி இடம் பெற்றிருப்பது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
Tamizhum Saraswatiyum Serial Trolls : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் தீபக் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நட்சத்திரா நடித்து வருகிறார்.
மேலும் இந்த சீரியலில் தீபக்கின் தம்பிக்கு திருமணம் ஆகி விட்டது போன்ற காட்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. ஆனால் முதலிரவு தள்ளிப் போய் வந்த நிலையில் இருவருக்கும் தற்போது சாந்திமுகூர்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான காட்சி ஒன்று ஒளிபரப்பான நிலையில் அதில் ஒருவர் புது மணப்பெண்ணிற்கு அறிவுரை கூற வந்துள்ளார். அப்போது எங்க காலத்துல பார்ட்டிங்க தப்பு தப்பா சொல்லி கொடுத்து பயப்பட வச்சுடுவாங்க என கூறுகிறார். அதற்கு அந்த புதுமணப்பெண் நான் தைரியமாக தான் இருக்கிறேன் என சொல்கிறார்.
விவரம் தெரியாத குழந்தை பாம்பை கையில புடிச்சி தூக்கினா அது தைரியமாய் இருக்குனு அர்த்தமா? என டபுள் மீனிங்கில் பேசி உள்ளார். இதனைப் பார்த்த பாஜக பிரமுகர் ஒருவர் எல்லார் வீட்டிலேயும் இதுதான் ஓடிக்கிட்டு இருக்கு. இப்படி இருந்தா எப்படி சமுதாயம் உருப்படும் என இந்த வீடியோவை பதிவு செய்து எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பலரும் இந்த காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் அந்த அம்மா எந்த பாம்பை சொல்லுது எனவும் நெட்டிசன்கள் சிலர் கமெண்ட் அடித்து வருகின்றனர்.