Tamils ​​Trend Hashtags
Tamils ​​Trend Hashtags

Tamils ​​Trend Hashtags – சென்னை: பிரதமர் மோடியின் தமிழக வருகையை முன்னிட்டு மூன்று விதமான ஹேஸ்டேக்குகளை தமிழர்கள் டிவிட்டரில் டிரெண்ட் செய்து வருகிறார்கள்.

அதில் ஒன்றில், சீனத்திலும் டிரெண்ட் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது

சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங், பிரதமர் மோடியை சந்திக்க இன்று தமிழகம் வருகிறார். இன்று மாமல்லபுரம் செல்லும் அவர் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

இருவரின் சந்திப்பு நிமித்தமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக தமிழர்கள் டிவிட்டரில் டிவிட் செய்து வருகிறார்கள்.

மோடி ஆட்சியில் இதுவரை ஆண்டுக்கு 21,000 விவசாயிகள் தற்கொலை: கனிமொழி குற்றச்சாட்டு!

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக #GoBackModi மீண்டும் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.

மேலும் சீன மொழியிலும் ” #回到莫迪 ” என்ற ஹேஷ் டேக் பிரதமர் மோடிக்கு எதிராக டிரெண்டாகி வருகிறது ஆச்சர்யமே.

இருப்பினும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வரவேற்கும் வகையில் #TamilNadu_welcomes_XiJinping என்ற ஹாஷ் டேக் டிவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

தமிழர்களுக்கும் சீனர்களுக்கும் நிறைய வரலாற்று தொடர்பு இருக்கிறது. அதனால் நாங்கள் சீன அதிபரை வரவேற்கிறோம் என்று டிவிட்டரில் தமிழர்கள் தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

மேலும் தமிழ் மொழியை விரும்பி படிக்கும் சீன நாட்டின் அதிபரை தாங்கள் வரவேற்கிறோம் என்றும், ஆனால் அதற்காக பிரதமர் மோடியை மறக்க மாட்டோம்,. அவருக்கு எப்போதும் go_back_modi தான் என்றும் டிவிட் செய்துள்ளனர்.

Tamils ​​Trend Hashtags
Tamils ​​Trend Hashtags