காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ள நிலையில் அதற்கு தடை விதிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

Tamilnadu Vs Karnataka Cauvery Issue : அன்று முதல் இன்று வரை தமிழகத்திற்கும் கர்நாடகாவுக்கும் இடையே பெரிய பிரச்சனையாக இருந்து வருவது காவிரி தான். கர்நாடக அரசு தமிழகத்திற்கு காவிரி தண்ணீரை தர மாட்டோம் என பலமுறை கூறியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனையடுத்து மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் ஒன்றை அமைத்து இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்டது.

இந்த நிலையில் தற்போது கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மீண்டும் ஒரு புதிய அணையை கட்ட திட்டமிட்டு வருகிறது. இதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது CWC மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் கர்நாடக அரசின் திட்டத்திற்கு அளிக்க கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், நடைமுறையில் உள்ள ஒப்பந்தங்களுக்கு எதிராக கர்நாடகா பென்னியார் ஆற்றின் குறுக்கே ஒரு அணைக்கட்டு அமைத்து வருகிறது. இதற்கு எதிராக தமிழகம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளது, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சி.டபிள்யூ.சி குரு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

இந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், உடனடியாக ஒரு தீர்ப்பாயத்தை அமைக்குமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளார் தமிழக முதல்வர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.