YouTube video

TamilNadu Record in Paddy Productions : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு துரிதமாக செயல்பட்டு வருகிறது. இந்தக் கொரானா வைரஸ் பரவி வரும் பேரிடர் காலத்திலும் மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து செயலாற்றி வருகிறது.

அதேசமயம் இந்த ஊரடங்கு காலத்தில் ஒரு போதும் விவசாயிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து அவர்களுக்கு ஊரடங்கு உத்தரவுகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக விவசாய நிலங்களில் சாகுபடி செய்யப்படும் நெல்லை நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலமாக தமிழக அரசு விவசாயிகளிடமிருந்து பெற்றுக்கொள்கிறது.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டாலின் அறிக்கை ஒன்றில் விவசாயிகள் கொண்டுவரும் மொத்த நெல்லையும் பெற்றுக்கொள்ள என் கொள்முதல் நிலையங்களில் உள்ள அரசு அதிகாரிகள் மறுக்கிறார்கள். ஒரு நாளைக்கு ஆயிரம் மூட்டைகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என கூறுவதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

2 Patients Recovered from Corona in Dangerous Stage

இந்த நிலையில் தற்போது உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அவர்கள் இதற்கு பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல் முழுவதுமாக கொள்முதல் செய்யப்படுவதில்லை என கூறியதில் உண்மை அல்ல. எவ்வித உச்ச வரம்பும் இன்றி விவசாயிகளின் நெல்லை அரசு நேரடியாக கொள்முதல் செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையின் மூலமாக ஸ்டாலின் அவர்கள் வைத்த குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார் அமைச்சர் காமராஜ்.

தமிழக அரசு விவசாயிகளுக்காக எடுத்து வரும் நடவடிக்கைகள் காரணமாக தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவாக இந்த ஆண்டு அதிக அளவில் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்பது பெருமைக்குரிய ஒன்றாகவும் அதிமுக அரசின் சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.