Edapadi K Palaniswamy

கொரானா பேரிடர் காலத்தில் இந்திய அளவில் தமிழகத்திற்கு முதலிடம் கிடைத்துள்ளது. எதில் முதலிடம் என்பது குறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க.

TamilNadu Growth in India : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. வெறும் ஒன்பது மாதத்தில் உலகம் முழுவதும் இல்லை பொருளாதார வளர்ச்சி இனி பார்த்திராத அளவு சிதைத்து விட்டது.

இந்த வைரஸ் தாக்குதலுக்கு தமிழகமும் தப்பவில்லை. இருப்பினும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டதன் காரணமாக பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. குணமடைந்து வீடு திரும்பவர்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்துள்ளது.

ஊரடங்கு விதிகளிலும் கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அளிக்கப்பட்டு தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது.

இந்த நிலையில் அகில இந்திய மாநிலங்களையும் ஆச்சர்யப்பட வைத்து, தமிழக மக்களை மிக்க மகிழ்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது சில புள்ளி விவரத் தகவல்கள்.

கடந்த 2 தினங்களுக்கு முன் வாகன விற்பனையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழகத்தில் வாகன விற்பனை குறித்து புள்ளி விவரங்களுடன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் தமிழகத்தில் கடந்த 2019 செப்டம்பர் மாதத்தையும், இந்த 2020 ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தையும் ஒப்பிட்டு வாகன விற்பனை விபரங்களைத் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது பொது வாகனங்கள் 17.18 சதவீத உயர்வும். இரு சக்கர வாகனங்கள் 19.87 சதவீதம் அதிகமாகவும். விவசாயத்திற்குத் தேவையான டிராக்டர்கள் 92.52 சதவீத அதிகமாகவும் விற்பனை செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.இது தமிழக மக்களின் பொருளாதார வளர்ச்சியில் வேகமான மாற்றத்தை காட்டுவதாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

இது மட்டுமல்ல முன்னதாக தேசிய அளவில் ஊரடங்குகாலத்தில் ஈர்க்கப்பட்ட மற்றும் அனுமதியளிக்கப்பட்ட முதலீடுகள் குறித்த தகவல் கடந்த ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது. அதில் தமிழகத்தை பொறுத்தவரை, 3 மாதங்களில் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.18 ஆயிரத்து 236 கோடி முதலீடுகளுக்கு அனுமதியளித்து முதலிடத்தில் உள்ளது. இது தேசிய அளவில் 18.63 சதவீதமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இது போல் உயர் கல்வியில் கடந்த 9 ஆண்டுகளில் தமிழகம் 49 சதவீத வளர்ச்சியை எட்டி நாட்டிலேயே முதலிடத்தில் இருக்கிறது தமிழகம்.

மத்திய அரசின் இ-சஞ்சீவனி திட்டம் மூலம் மருத்துவ ஆலோசனைகள் பெறுவதில் இந்தியாவில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது, மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அதிகம் பயன்படுத்தும் மாநிலங்களிலும் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 1.57 கோடி குடும்பங்கள் 5 லட்சம் ரூபாய் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தைப் பெற்றுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

பள்ளிப்படிப்பை முழுவதுமாக நிறைவு செய்பவர்கள் பட்டியலிலும் தமிழகத்திற்கு தான் முதலிடம் கிடைத்துள்ளது.

தமிழகத்தில் 86.2 சதவீதம் பேர் பள்ளிப்படிப்பை முழுவதுமாக நிறைவு செய்கிறார்கள். இதே போல் விபத்துகள் குறைந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பெற்று. இதற்கான விருதை மத்திய அரசிடம் இருந்து அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் சமீபத்தில் பெற்றுக்கொண்டார்.

இதுமட்டுமல்லாமல் தூய்மை இந்தியா திட்டத்தின்படி, தூய்மையான கிராமங்கள் உள்ள முதல் மாநிலமாகத் தமிழகம் தேர்வாகியுள்ளது. குஜராத், ஹரியாணா ஆகிய மாநிலங்களைப் பின்னுக்குத் தள்ளி, தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. இதற்கான விருதை, பிரதமர் மோடியிடமிருந்து தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி பெற்றார்.

ஏற்கனவே கடந்த 2019-ல் இந்திய மாநிலங்களிலே சிறந்த நல்லாட்சிக்கான குறியீட்டில் தமிழகத்துக்கு முதலிடம் வழங்கி மத்திய அரசு கவுரவித்தது குறிப்பிடத்தக்கது. மத்திய நிர்வாக சீா்திருத்தம் மற்றும் பொது மக்களின் குறைதீா்க்கும் துறையானது அனைத்து மாநிலங்களின் செயல்பாடுகளை ஆய்வு செயது 17 அரசுத் துறைகளில் இருந்து பெறப்பட்ட விவரங்களின் அடிப்படையில் தமிழகம் 5.62 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிப்பதாகத் தெரிவித்தது.

குடிநீா் வசதி, கிராமங்கள் மற்றும் நகா்ப்புறப் பகுதிகளில் மலம் கழிப்பதைத் தடுத்தது, தடையில்லாத மின்சார விநியோகம், புகா்ப் பகுதிகளை அணுகுவதற்கான அம்சங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் சிறப்பாக இருப்பதாக மத்திய அரசு சுட்டிக் காட்டியுள்ளது. இதற்காக பொது உள்கட்டமைப்பு மற்றும் பயன்பாடு என்ற பிரிவில் மாநில அரசுக்கு 0.74 புள்ளிகளை அளித்து முதலிடத்தை வழங்கியுள்ளது.இதே போல் சட்டம், ஒழுங்கைப் பராமரித்து பொது மக்கள் பாதுகாப்புக்கு முன்னுரிமை தமிழகத்துக்கு 0.56 புள்ளிகள் அளிக்கப்பட்டு இந்தியாவிலேயே முதலிடம் வழங்கப்பட்டது.

அடுத்த 2021-ஆம் ஆண்டில்தான் இந்தியா பொருளாதார வளர்ச்சிப்பாதைக்குத் திரும்பும் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரே கூறியுள்ள நிலையில் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகம் மிக வேகமாக பொருளாதாரத்தில் மீண்டு வருவதையே காட்டுகிறது.

“கொரோனா”வையும் தாண்டி தமிழகம் முன்னேற்றப் பாதையில் பீடு நடை போடுவதைக் கண்டு ஒட்டு மொத்த இந்திய மாநிலங்களும் ஆச்சர்யத்துடன் திரும்பிப் பார்க்கின்றன.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.