Tamilnadu Government Upcoming Plans
Tamilnadu Government Upcoming Plans

பாதுகாப்புத் துறையை பலப்படுத்தல் மத்திய அரசுடன் தமிழ்நாடு அரசு கைகோர்த்துள்ளது.இதனால் தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.

Tamilnadu Government Upcoming Plans : பாதுகாப்பு தொழில்துறை முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில், உலகளாவிய இரண்டாவது முதலீட்டாளர்கள் கூட்டத்தில் விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்துறை கொள்கையை மாற்ற மாநில அரசு திட்டமிட்டுள்ளது என்று தமிழக தொழில்துறை மேம்பாட்டுத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கார்ப்பரேஷன் உஷா ககரலா தெரிவித்துள்ளார்.

மேலும் இதன் வளர்ச்சி குறித்த ஐந்தாவது காணொளி கான்பரன்ஸில் “ஆத்மா நிர்பர் பாரத் மிஷன்” என்ற திட்டத்தின் கீழ் இந்திய பாதுகாப்பு உற்பத்தியாளர்களின் சங்கத்துடன் இணைந்து தமிழக தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் ஊக்குவிப்பு மையம் செயல்பட இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மகாபாரதப் போருக்குப் பிறகும் உயிருடன் வாழும் ஐந்து நபர்கள்..!

இதற்காக அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டு வரை ஜெர்மனி, பிரான்ஸ், பின்லாந்து, தாய்லாந்து, கொரியா ஜப்பான், சைனா போன்ற பல நாடுகளிலிருக்கும் நிறுவனங்கள் மூலமாக 10 மில்லியன் டாலர்கள் முதலீட்டை ஈர்த்து சென்னை கோயம்புத்தூர் திருச்சி சேலம், கிருஷ்ணகிரி மற்றும் காஞ்சிபுரம் போன்ற இடங்களில் இதற்கான தொழிற்சாலைகளை அமைத்து சாதனங்களைப் தயாரிக்க போவதாக கூறியுள்ளார்.

இதன் மூலம் தமிழகத்தில் உள்ள சிறு-குறு தொழிலாளர்களை ஊக்கப்படுத்துவதில் தமிழக அரசு கவனம் செலுத்த இருப்பதாக கூறியுள்ளார். இதன் காரணமாக தமிழகத்தில் வேலைவாய்ப்புகள் பெருகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.