Tamilnadu Government Moves in Jayalalithaa Birthday

அதிமுக தொண்டர்கள் தற்போது வரை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் பக்கமே இருந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Tamilnadu Government Moves in Jayalalithaa Birthday : மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வமும் ஒன்றிணைந்து உற்சாகமாக கொண்டாடினர்.

அதிமுகவினர் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றி, உறுதி மொழி எடுக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை மு. ஓ. பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்ததையடுத்து தொண்டர்கள் தங்கள் வீடுகளில் தீபம் ஏற்றியும், உறுதி மொழி எடுத்தும் பிறந்தநாளை கொண்டாடினர்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் தலைமையில் ஓரணியாக நிற்பது, தேர்தலில் தங்கள் பலத்தை காட்டுவது போல் பிரதிபலிக்கிறது.

கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமியும், ஓ. பன்னீர் செல்வமும் கேக் வெட்டி மாறி மாறி ஊட்டி கொண்டனர்.