கல்லூரி மாணவர்களுக்கு 2 GB Data இலவசம் - தமிழக முதல்வரின் புதிய அறிவிப்பு.! | TN Govt | EPS | AIADMK

Tamilnadu Government Announcment for Students : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களின் தேவைகளை அறிந்து தமிழக அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்களுக்கு வரவேற்பும் பாராட்டும் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.

எடுத்துக்காட்டாக பொங்கல் விழாவை கொண்டாடும் விதமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் மற்றும் இலவச பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுமென தமிழக அரசின் திட்டங்கள் உள்ளிட்டவைகளுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.

Tamilnadu Government Announcment for Students

வெகு விரைவில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் இறங்கி தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.

தமிழக முதல்வர் பழனிசாமி மாவட்டம் மாவட்டமாக சென்று மக்களை சந்தித்து நேரடியாக அவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். அதிமுக அரசு இதுவரை செயல்படுத்திய நல்ல திட்டங்கள் குறித்து பேசி ஓட்டு சேகரித்து வருகிறார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை மக்கள் கடல் போல் திரண்டு அமோக வரவேற்புடன் வரவேற்று ஆதரவளித்து வருகின்றனர்.