அண்ணாவின் பிறந்தநாளையொட்டி தமிழகத்தில் 129 பேருக்கு அண்ணா பதக்கம் - தமிழக அரசு அறிவிப்பு.! | TN Govt

Tamilnadu Government Anna Award Announcement :  காஞ்சிபுரத்தில் சாதாரண குடும்பத்தில் ஒருவராக பிறந்து தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் பேரறிஞர் அண்ணா. இவருக்கு இன்று பிறந்த நாள்.

பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு 129 காவல்துறை, சீருடை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு அண்ணா பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் காவல்துறை தீயணைப்புத் துறை சிறைத்துறை ஊர்க்காவல் படை உள்ளிட்டவைகளில் பணியாற்றும் 129 பேருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட உள்ளது.

வீரதீர செயலுக்கான தீயணைப்பு துறை பதக்கம் நெல்லை மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி மற்றும் ஒரு தீயணைப்பு வீரருக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவை அனைத்தையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கலந்து கொள்ளும் அடுத்த நிகழ்ச்சியில் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.