தூத்துக்குடி

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தைச் சார்ந்த 13 பேருக்கு கடந்த 2011 ஆம் ஆண்டே அரசு வேலை வழங்கி உத்தரவிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

தூத்துக்குடி கலவரத்தில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டின் போது, உயிரிழந்த 13 பேரின் குடும்பங்களுக்கும் ஆகஸ்ட் மாதம் 2018ன் போதே அவர்களின் கல்வி தகுதிக்கேற்ப அரசு பணி நியமன ஆணையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் வழங்கினார்.

இது தெரியாத, திமுக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ”உயிரிழந்த குடும்பத்திற்கான அரசு பணி குறித்து இன்றாவது தூத்துக்குடி செல்லும் முதல்வர் உத்தரவிடுவாரா?” என தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

மே மாதம் 2018 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் இச்சம்பவம் நடைபெற்ற பிறகு, நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு, அதே ஆண்டு ஆகஸ்ட் மாதமே அரசு சார்பாக வெளியிடப்பட்டிருந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இறந்த 13 பேர் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல், கலவரத்தின் போது படுகாயமடைந்த குடும்பத்தார்களுக்கும் அரசு வேலை என மொத்தம் 19 பேருக்கு வருவாய் துறை, சமூக நலத்துறை, பேரிடர் துறை, அதேபோல சத்துணவுத் திட்டம் ஆகிய துறைகளில் உடனடியாக பணி நியமன ஆணை வழங்கப்பட்டு, அவர்கள் பணியிலும் அமர்த்தப்பட்டனர்.

மேலும் சம்பவம் நடத்த பிறகே, உயிரிழந்த நபர்கள் குடும்பத்திற்கு தலா 20 லட்சமும் படுகாயமடைந்தோர் குடும்பத்திற்கு தலா 5 லட்சமும் அரசின் சார்பில் இழப்பீட்டு தொகையாக வழங்கப்பட்டது.

தூத்துக்குடி திமுக எம்.பி.க்கு இந்த விஷயம் தெரியாதா? அல்லது தெரிந்தும் முதல்வர் தூத்துக்குடி செல்லும் இந்நாளில் அரசியலுக்காக மக்களை திசை திருப்ப இந்த பொய் தகவலை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கனிமொழி பதிவிட்டுள்ள பதிவு