Tamilnadu Got Best Perfomance Award

இந்த வருடத்திற்கான இந்தியா டுடே விருதுகள் போட்டியில் இந்தியாவின் சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Got Best Perfomance Award : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை அறிந்து சிறப்பாக செயலாற்றி வருகின்றனர்.

தமிழகத்தில் எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும் அதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை பாராட்டும் வகையில் பல்வேறு திட்டங்கள் புதிதாக தொடங்கப்பட்டு உள்ளன. தொடர்ந்து பல திட்டங்கள் தொடங்கப்பட்டும் வருகின்றன.

பொருளாதார வகையில் தமிழகம் தொடர்ந்து முன்னேற்ற பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தக் கொரானா பேரிடர் காலத்தில் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்கள் சரிவை கண்ட போதிலும் தமிழகம் அன்னிய முதலீடுகளை ஈர்த்து முன்னேற்றத்தையே கண்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது இந்தியா டுடே பத்திரிகையின் இந்த வருடத்திற்கான சிறந்த ஆட்சியை வழங்கும் மாநிலமாக தமிழகம் தேர்வாகி உள்ளதாக அறிவித்துள்ளது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியமான நடவடிக்கைகளாலும் திட்டங்களால் தமிழகம் வளர்ச்சிப் பாதையில் சென்று இன்று இந்திய அளவில் சிறந்த மாநிலமாக தேர்வாகி இருப்பது தமிழகத்துக்கு கிடைத்த பெருமையாகவே பார்க்கப்படுகிறது.

சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வாகி இருப்பதற்கு மக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.