Tamilnadu CM About Election 2021

அதிமுக தலைமையில் தான் தேர்தல் நடைபெறும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆணித்தனமாக தெரிவித்துள்ளார்.

Tamilnadu CM About Election 2021 : தமிழகத்தில் கடந்த பத்து வருடங்களாக தொடர்ந்து புரட்சித்தலைவி ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது.

அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான வேலைகளில் அத்தனை கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன.

மேலும் தமிழக பாஜக தலைவரான முருகன் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமையில் தான் கூட்டணி இடம் பெறும். தமிழகத்தில் அந்த அளவிற்கு பாஜக காலூன்றி விட்டது என தெரிவித்திருந்தார்.

SHOCKING: 2021 சட்டமன்றத் தேர்தலில் தளபதி விஜய் போட்டி? -ரகசியமாக நடந்த ஆலோசனை.!

பாஜக தலைவர் முருகனின் இந்த கருத்து குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தஞ்சாவூரில் ஆய்வு செய்து விட்டு செய்தியாளர்களை சந்தித்த போது கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு தமிழக முதல்வர் அன்று முதல் இன்று வரை புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா வழி வந்த அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமைந்து வருகிறது. இனி வரும் காலங்களிலும் அது அப்படியே தொடரும் என கூறியுள்ளார்.

அதாவது அடுத்த சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி இடம்பெறும் அதில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு செய்த போது முதல்வர் செய்தியாளர்களிடம் கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் தான் முடிவு செய்யப்படும் என தெரிவித்த நிலையில் தஞ்சாவூர் செய்தியாளர்கள் சந்திப்பில் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும் என தெரிவித்துள்ளார்.