
Tamilnadu chances Heavy Rain – சென்னை: தமிழகம் மற்றும் அதனை சுற்றியுள்ள பிறபகுதிகளில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் வீசிய கஜா புயல் தமிழகத்தை மொத்தமாக சூறையாடியது.பலத்த காற்று வீசியதால் மரங்கள் வேரோடு சாய்ந்தன,
மேலும் பொதுமக்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளானார்கள். இதனால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.
இந்நிலையில் , தற்போது தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதிதாக உருவாகியுள்ள இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை வலுப்பெறும் என்றும், காற்றழுத்த தாழ்வு நிலை, தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், நாளை இது வலுவடைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், நேற்று தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் நாளையில் இருந்து டெல்டா மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதியில் புதிதாக புயல் உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதற்கு ‘ பேய்ட்டி’ என பெயரிடப்பட உள்ளது. இந்த புயலால் தமிழகத்துக்கு எந்தபாதிப்பும் இல்லை என்றாலும் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்த 24 மணி நேரத்துக்கு தென் தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வட மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.