Tamilnadu Cabinet meeting to be held tomorrow
Tamilnadu Cabinet meeting to be held tomorrow

சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம், நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 11 மணியளவில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில், நாளை தமிழக அமைச்சரவை கூட்டம், நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. மேலும் இக்கூட்டத்தில் ஆழ்துளை கிணறுகள் தொடர்பாக புதிய விதிமுறைகளை வகுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், மருத்துவர்கள் வேலை நிறுத்தப்போராட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் பற்றி, அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளன. அதோடு தமிழகத்தில் பெய்து வரும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முடிவு எடுக்க வாய்ப்புள்ளது. இதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

அதை தொடர்ந்து அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள், கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர் ஒப்புதல் அளித்த பின்னரே, சட்டசபை கூட்டத் தொடரில் அவை அறிவிப்புகளாக வெளியிடப்படும் என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில், நவம்பர் 10 ஆம் தேதி காலை 10 மணியளவில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ திடலில் உள்ள அரங்கத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையில், திமுகவின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்த திமுக பொதுக்குழு கூட்டம் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here