Tamilnadu Achievement in Production

உற்பத்தியில் இந்தியாவிற்கு என் முன்னோடியாக மாறியுள்ளது தமிழகம். இது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

Tamilnadu Achievement in Production : இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையில் அதிமுக அரசு ஆட்சி செய்து வருகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை உயர்த்த தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலமாக தமிழகத்தின் மீது முதலீடுகளை ஈர்த்து வருகிறார்.

குடிமராமத்து திட்டம் போன்ற திட்டங்கள் மூலமாக விவசாய உற்பத்தியில் பெரும் புரட்சியை படைத்துள்ளார். இதுவரை இல்லாத அளவாக இவ்வாண்டு நெல் உற்பத்தி அதிகரித்துள்ளது.

இது ஒருபுறமிருக்க தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு பொருட்களின் உற்பத்தியில் தமிழகம் இந்திய அளவில் முக்கிய இடங்களை தக்கவைத்துள்ளது.

அதுகுறித்த விவரங்களைப் பார்க்கலாம் வாங்க

  1. ஆடை உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் முதல் இடத்தை பிடித்துள்ளது.
  2. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் உற்பத்தியில் தமிழகத்திற்கு இரண்டாவது இடம் கிடைத்துள்ளது.
  3. மருந்து உற்பத்தியில் தமிழகத்திற்கு ஐந்தாவது இடம்.
  4. டயர் உற்பத்தியில் இந்திய அளவில் தமிழகம் முதலிடத்தை பிடித்துள்ளது.
  5. மென்பொருள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தமிழகத்திற்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது.

தமிழக அரசும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் மேற்கொண்டு வரும் பல்வேறு திட்டங்களின் மூலமாக தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி கிடுகிடுவென உயர்ந்து வருகிறது என்பதற்கு இதுவே சான்று.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.