Tamilisai Soundararajan youngest governor
Tamilisai Soundararajan youngest governor

Tamilisai Soundararajan youngest governor – சென்னை: தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வரும் 28-ம் தேதி தமிழகம் வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கானா மாநில ஆளுநராக பதவியேற்ற பின்பு தமிழிசை சவுந்தரராஜன் முதன்முறையாக தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடியில் வரும் 28- ஆம் தேதி நடைபெறும் மகாகவி பாரதியார் 98-வது நினைவு நாள் நிகழ்ச்சியில் தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பேச உள்ளார்.

கடந்த 8-ம் தேதி தெலுங்கானா மாநில ஆளுநராக பதவியேற்றுக்கொண்ட தமிழிசை சவுந்தரராஜன், அதன்பிறகு முதன்முறையாக தமிழகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழிசைக்கு விருது : “இந்திய அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரம்” !!

ஆளுநர் ஆவதற்கு முன்பு வரை ஆக்டிவ் அரசியல்வாதியாக இருந்தவர் தமிழிசை சவுந்தரராஜன். அவ்வப்பொழுது டிவிட்டரில் தனது கருத்துக்களை பகிர்ந்து வருவார்.

மேலும் கட்சி வளர்ச்சிப்பணிகளுக்காக ஊர் ஊராக பயணம் செய்து கொண்டிருந்த அவர், ஆளுநர் ஆகிய பிறகு ராஜ்பவனுக்குள்ளே முடங்கிக்கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் பாரதி தமிழ்ச் சங்கம் சார்பாக விழாவில் கலந்துகொள்ளுமாறு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாம்.

எனவே தமிழகத்திற்கு செல்ல இந்த விழா தமக்கு ஒரு சரியான வாய்ப்பாக இருக்கும் எனக் கருதி அவரும் ஒப்புக்கொண்டாராம்.

மேலும், ஆளுநர் தமிழிசை தமிழகம் வரும் போது, அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க பலர் நேரம் கேட்டிருக்கிறார்களாம்.

எனவே, அவர் கூடுதலாக ஒரு நாள் தமிழகத்தில் தங்கக்கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கட்சி சார்பற்ற முறையில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும் தடபுடலாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

ஆளுநரான பின்னர் முதன் முறையாக தமிழகம் வரும் தமிழிசை சவுந்தரராஜன்- க்கு தடபுடலாக வரவேற்பை அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.