Tamilisai Soundararajan Tweet
Tamilisai Soundararajan Tweet

Tamilisai Soundararajan Tweet – சென்னை: சமீப காலமாகவே பெட்ரோல் விலை குறைந்து வருகிறது. வர்த்தகப் போர் மற்றும் பிற காரணங்களால் கச்சா எண்ணெய் விலை சமீப காலமாக குறைய ஆரம்பித்துள்ளது.

இந்த விலைக்குறைவால் உள் நாட்டு எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து வருகின்றன.

இருப்பினும் கடந்த வாரம், பெட்ரோல் விலை உயர்ந்துகொண்டே போனது. இந்த விலை ஏற்றத்துக்கு மத்திய அரசை கண்டித்து போராட்டங்களும், நாடு தழுவிய வேலைநிறுத்தமும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

அதற்கு பதில் அளித்த மத்திய அரசு, ‘விலை ஏற்றத்திற்கு காரணம் நாங்கள் இல்லை. எண்ணெய் நிறுவனங்கள்தான் விலையை ஏற்றுகின்றன’ என்று விளக்கம் அளித்திருந்தது.

தற்போது பாஜக மாநில தலைவர் தமிழிசை இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “விலை ஏறிய போதெல்லாம் ஒலித்த குரல்கள் ஒடுங்கியது? விலை இறங்குமுகம் ஆனதால்? ஏறியதற்கு மோடி தானே காரணம் என்று விமர்சனம் செய்தவர்களே!! விலை குறைந்தது பீப்பாய் விலை குறைந்ததால்தான் என்கிறார்கள்.

ஏற்றியது மோடி என்பார் இறக்கியது பீப்பாய் என்பார்? ???” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழிசையின் இந்த டிவிட் – க்கு, ” கர்நாடகம் என்ற ஒரு மாநில தேர்தலுக்காகவே பெட்ரோல் விலை குறைக்கப்பட்டபோது,

தற்போது 5 மாநில தேர்தல்கள் நடக்கும்போது பெட்ரோல் விலை என்ன குறையாமலா இருக்கும் ?? “என்று நெட்டிசன்கள் தமிழிசையின் ட்வீட்டுக்கு பதில் டிவிட் செய்து வருகின்றனர்.