tamilisai
தெலுங்கானா மாநிலத்தின் முதல் பெண் ஆளுனராக தமிழிசை சவுந்தரராஜன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

Tamilisai soundararajan sworn as governor – தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தராஜன் சமீபத்தில் தெலுங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதற்கான நியமன ஆணை கடந்த 3ம் தேதி தெலுங்கானா பவன் அதிகாரிகள் அவரிம் ஒப்படைத்தனர். மேலும், அவர் இன்று பதவியேற்பதாக அறிவிக்கபட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடந்தது.

திரும்பத் திரும்ப பல்பு வாங்கும் வனிதா, மாஸ் காட்டிய கமல் – வைரலாகும் வீடியோ.!

இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு தெலுங்கானா உயர் நீதிமன்ற நீதிபதி ராகவேந்திரா எஸ்.சவுகான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு முடிந்தவுடன் தமிழிசை தனது தந்தை குமரி ஆனந்தன் மற்றும் தாயின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். அவருக்கு தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

தமிழகம் சார்பில் ஓ.பன்னீர் செல்வம்,அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், தேமுதிக சார்பில் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சரத்குமார் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர்.