Tamilisai Soundararajan Condolences to Vasanthakumar
Tamilisai Soundararajan Condolences to Vasanthakumar

ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன் என வசந்தகுமார் மறைவிற்கு தமிழிசை சௌந்தராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tamilisai Soundararajan Condolences to Vasanthakumar : காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி எம்பியான திரு வசந்த குமார் அவர்கள் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இவருடைய மறைவு அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் தலைவர்கள் திரை உலக பிரபலங்கள் என பலரும் எம்பி வசந்தகுமாரின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னால் தமிழக பாஜக தலைவரும் தெலுங்கானா மாநில ஆளுநரும் ஆன தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வசந்தகுமார் மறைவிற்கு கண்ணீருடன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அப்பா குமரி ஆனந்தின் அரசியல் தாக்கம் இருவரிடமும் இருந்தது. ஆனால் இருவரும் வேறு வேறு கோணத்தில் பயணித்தோம்.

இயக்கம் வேறாக இருந்ததால் இணக்கமாக இல்லையே தவிர ரத்தபாசம் இருவரிடமும் இருந்தது.

மாஸ்டர் பட ரிலீஸ் எங்களுக்கே பெரிய ஏமாற்றம் தான்.. லோகேஷ் கனகராஜ் ஓபன் டாக்.!!

சிறுவயதில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டது, சண்டையிட்டது எல்லாம் நினைவிற்கு வருகிறது.

வசந்த் அண்ட் கோ என்ற சாம்ராஜ்யத்தை உருவாக்கி பல பேருக்கு பணி கொடுத்த தர்மம் கூட உங்களை காப்பாற்றவில்லையே என்று என் மனம் பதைபதைக்கிறது.

கண்டிப்புடன் கண்ணீரை அடக்க முயற்சித்தாலும் கரைபுரண்டு கண்ணீர் பெருகுகிறது.

ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன் என அவரது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எம்பி வசந்தகுமாரின் மறைவுக்கு குடியரசு தலைவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடி என பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.