Tamilisai Saoundarrarajan
Tamilisai Saoundarrarajan

Tamilisai Saoundarrarajan – சென்னை: “ஜெ.தீபா அமைப்பினர் தமிழிசையின் போஸ்டரில் அவரது வாயை ஊசி நூலால் தைத்து போராட்டம் நடத்தினர். இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது” .

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி ஆயிரக்கணக்கான மக்கள் 100 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களின் போராட்டம் 100 நாட்களை எட்டியவுடன் பேரணியாக ஆட்சியர் அலுவலகம் நோக்கி சென்றனர்.

அச்சமயம் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்ததால், போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இருப்பினும், அவர்கள் 144 தடை உத்தரவை மீறி சென்றதால், போலீசார் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இதில் சம்பவ இடத்திலேயே 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை பூட்டி சீல் வைத்தது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் நிர்வாகம் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரி தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகிய போது, பசுமை தீர்ப்பாயம் ஆலையை திறக்க அனுமதி கொடுத்தது.இதனை தமிழக அரசு எதிர்த்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்தது.

இதனால் தமிழகமே கடும் கொந்தளிப்பில் காணப்பட்டது,மேலும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெ.தீபா பேரவையினர் போராட்டம் நடத்தினர்.

அப்போது “ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடுபவர்கள் முட்டாள்கள் என்று பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்து இருந்தார்”.

இதை கண்டித்து ஜெ.தீபா போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது ‘தமிழக மக்களை முட்டாள்கள் என கூறிய தமிழிசையின் வாயை தைக்க வேண்டும் என கூறிய அவர்கள், அவரது உருவம் கொண்ட போஸ்டரில் அவரது வாயை ஊசி நூல் கொண்டு தைத்து நூதன போராட்டம் நடத்தினர்’ .

தற்போது, இந்த வீடியோ வைரலாகி வருகிறது.ஏற்கனவே தமிழிசை சவுந்தரராஜன்- ஐ நெட்டிசன் கள் கிண்டல் செய்து வலைதளங்களில் மீம்ஸ், வீடியோ போன்றவற்றை வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவ்வாறு ஜெ.தீபா செய்திருப்பது சமூக வலைதளங்களில் காட்டு தீயாய் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here