
Tamil Thalaivas win Pro Kabaddi 2018 – 6-வது புரோ கபடி லீக் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று இருக்கின்றது.
இத்தொடரில் நேற்று இரவு நடைபெற்ற முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் மற்றும் தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதினார்கள்.
போட்டியின் முதல் பாதியில் 18-11 என்ற புள்ளி கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி முன்னிலை வகித்தது.
அந்த முன்னிலை தொடர் முடியும் வரை தமிழ் தலைவாஸ் தக்க வைத்துக் கொள்ளவே போட்டியில் முடிவில் தமிழ் தலைவாஸ் 31-25 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வெற்றி பெற்றது.
மற்றொரு ஆட்டதில் பெங்களூரு புல்ஸ் அணி உ.பி. அணியை எதிர் கொண்டது. அதில் 37-27 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு அணி உ.பி.
அணியை வெற்றி பெற்றது. இந்த தொடரில் பெங்களூரு அணிக்கு இது 9-வது வெற்றி ஆகும்.
நாளை நடைபெற உள்ள முதல் போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் – புனேரி பால்டன் மோத உள்ளனர்.
இரண்டாவது போட்டியில் பெங்களூரு புல்ஸ் – தெலுங்கு டைட்டன்ஸ் அணிகளும் மோத உள்ளது.