நேற்று இரண்டாம்கட்ட ஆட்டம் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் பாட்னா அணியும் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிக் காட்டினார். இறுதியில் தெலுங்கு டைட்டன்ஸ அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி 35-31 புள்ளிகள் என்ற கணக்கில் பாட்னா அணியை வென்றது.

மேலும் நேற்றைய மற்றொரு போட்டியில் புனே அணி மற்றும் ஜெய்ப்பூர் அணிகள் மோதின. இதில் புனே அணி 29-25 புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வெற்றி பெற்றது.

இதுவரை குரூப்-ஏ பிரிவில் புனே, மும்பை மற்றும் ஹரியானா அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளது. குரூப்-பி பிரிவில் தெலுங்கு டைட்டன்ஸ், பாட்னா மற்றும் பெங்களூரு அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளது . இதுவரையில் நடந்த போட்டிகளில் அடிப்படையில் எடுக்கப்பட்ட புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி 7 புள்ளிகள் மட்டுமே எடுத்து பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.