Tamil Thalaivas : Sports News, World Cup 2019, Latest Sports News, India, Sports, Latest Sports News, World Badminton Championship, Pro KabaddiLeague

Tamil Thalaivas :

புரோ கபடி போட்டி தொடரில் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்றான தமிழ் தலைவாஸ் அணி இதுவரை விளையாடிய 14 போட்டிகளில் 3 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளதால் ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

புள்ளிப்பட்டியலில் மொத்தமுள்ள 12 இடங்களில் 11வது இடத்தில் தமிழ் தலைவாஸ் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தோல்விகள் தொடர்ந்தால் கடைசி இடத்திற்கும் செல்லவும் அதிக வாய்ப்புகள் உள்ளது.

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஒருநாள் தொடர் இன்று தொடக்கம் !

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டி ஒன்றில் தமிழ் தலைவாஸ் அணி 16 புள்ளிகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. டெல்லி அணி நேற்றைய போட்டியில் 50 புள்ளிகள் எடுத்தனர்.

அந்த அணியின் ராகுல் செளத்ரி 13 ரைட் புள்ளிகளும் 4 போனஸ் புள்ளிகளும் என 17 புள்ளிகள் தனது அணிக்கு எடுத்து கொடுத்தார்.

அதேபோல் மீரஜ் 12 புள்ளிகளும் விஜய் 5 புள்ளிகளும் எடுத்தனர். தமிழ் தலைவாஸ் அணியின் ராகுல் செளத்ரி 14 புள்ளிகளும், அஜித்குமார் 9 புள்ளிகளும் பெற்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.