Tamil Rockers

Tamil Rockers : தமிழ் ராக்கர்ஸை கண்டு பிடிங்க.. இல்லனா தமிழ் சினிமாவை இழுத்து மூடுங்க – பிரபல இயக்குனர் ஆவேச பேச்சு.!

சிறிய பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றாலும் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. தற்போது வெளியாகியுள்ள பேரன்பு, சர்வம் தாளமயம் ஆகிய படங்கள் நன்றாக இருக்கிறது.

பொது நலன் கருதி இசை வெளியீட்டு விழாவில் மிஸ்கின், திருமுருகன் காந்தி ஆவேச பேச்சு

காலையில் பார்க்கலாம் என்றால் தியேட்டர்கள் இல்லை. இந்த இரண்டு படங்களும் தமிழ் ராக்கர்ஸில் வெளியாகியுள்ளது.

தயாரிப்பாளர் சங்கம் என்ன தான் செய்கிறது? இதையெல்லாம் ஒழிக்கிறோம் என கூறி தானே பதிவிக்கு வந்தார்கள். ஆனால் தற்போது என்ன செய்கிறார்கள்? சிறிய பட்ஜெட் படங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன.

7 பெரிய நடிகர்களின் படங்கள் மட்டும் பிரச்னையில்லாமல் வெளியாகிறது. திரையுலகமே மோசமான நிலைமையில் சென்று கொண்டிருக்கிறது. தமிழ் ராக்கர்ஸை கண்டு பிடிங்க இல்லனா தமிழ் திரையுலகத்தை இழுத்து மூடிட்டு போக வேண்டியது தான் என உருக்கமாகவும் ஆவேசமாகவும் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here