Tamil nadu Weather Update : Chennai, Tamil nadu, current weather update, chennai weather report, chennai weather Update, Tamil nadu

Tamil nadu Weather Update :

சென்னை: வட தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் நாளை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

குறிப்பாக நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருவதால், அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக நீலகிரியில் 5 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும் சென்னையில் கோடம்பாக்கம், கிண்டி, திருமங்கலம், சேப்பாக்கம், அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், தரமணி, வேளச்சேரி, அடையாறு, திருவில்லிக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை கனமழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

இந்நிலையில், காற்றின் திசை மாற்றம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்து வருவதாகவும், வட தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் நாளை வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர், வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் மிதமான மழை பெய்து வருகிறது. பருவமழை தொடங்குவதால், மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.