YouTube video

Tamil Nadu Govt Announcement on Women’s Safety : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக மக்களின் நலனுக்காக தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இந்த கொரோனா வைரஸ் பேரிடர் காலத்திலும் மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து செயலாற்றி வருகிறார்.

இந்த நிலையில் தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையை அதிகமாக்கும் வகையில் தமிழகத்தின் சட்டங்களில் சில திட்டங்களை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதாவது வரதட்சணை கொடுமைக்கு 10 வருட சிறை தண்டனை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தவறான நோக்கத்துடன் பெண்களை பின்தொடர்பவர்களுக்கான சிறை தண்டனை 7 ஆண்டுகளாக அதிகரிக்க படுவதாக தமிழக முதல்வர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். விதி எண் 110-ன் கீழ் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

அதே போல் வரதட்சணை கொடுமை போன்ற குற்ற நோக்கத்தில் செயல்படுபவர்களுக்கு 5 முதல் 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதற்கான சட்ட திட்டங்கள் மத்திய அரசின் அனுமதியோடு விரைவில் கொண்டு வரப்படும் எனவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

18 வயதுக்கு உட்பட்டவர்களை பாலியல் தொழில் வேலைக்கு வாங்குபவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் திருமண உதவி திட்டம், தாலிக்கு தங்கம், பணி புரியும் பெண்களுக்கு இருசக்கர வாகனம் போன்ற திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரின் இந்த அதிரடியான திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் ஆதரவும் கிடைத்து வருகின்றன. அதிலும் குறிப்பாக பெண்கள் இந்த சட்ட திட்டங்களுக்கு அல்லது முழு ஆதரவை கொடுத்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.