Tamil Nadu Government Plans to Temples
Tamil Nadu Government Plans to Temples

இந்துக் கோவில்களுக்கும் உடற்பயிற்சி கூடங்களில் பயிலும் மாணவர்களுக்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

Tamil Nadu Government Plans to Temples : தமிழகத்தின் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசு மக்களின் நலனுக்காக தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் தற்போது அறநிலைத்துறை கீழ் வரும் இந்து கோவில்களுக்கும் தொழிற் பயிற்சிக் கூடங்கள் பயிலும் மாணவர்களுக்கும் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளார் தமிழக முதல்வர்.

கோவில்களுக்கான திட்டங்கள் :

தமிழகத்தில் உள்ள திருக்கோவில்களில் பொதுச்சொத்துக்களை பராமரிக்கவும், தினமும் தங்குதடையின்றி பூஜைகள் நடைபெறும் தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்.

அவை

சென்னை திருவான்மியூரில் உள்ள மருதீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 20 கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நவீன திருமண மண்டபத்தை திறந்து வைத்தார்.

கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி வட்டம், பெண்ணாடம் பகுதியில் உள்ள, அருள்மிகு பிரளயகாலேசுவரர் திருக்கோயில், திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், ஆற்காடு குப்பத்தில் அமைந்துள்ள, அருள்மிகு சோளீஸ்வரர்சுவாமி திருக்கோயில் மற்றும் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், மடவார்வளாகம் பகுதியில் உள்ள, அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில் ஆகிய திருக்கோயில்களில் 1 கோடியே 53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அன்னதானக் கூடங்களையும் திறந்து வைத்தார்கள்.

இதன் மூலம் இந்த கோவில்களுக்கான வருமானம் அதிகரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் தொழிற்பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்காக திட்டங்கள்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்காக 4 கோடியே 53 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டிடம் மற்றும் பயிற்சியாளர்கள் விடுதி கட்டிடம்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆபரேட்டர் அட்வான்ஸ்டு மெஷின் டூல்ஸ் என்ற புதிய தொழிற்பிரிவிற்கு 82 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிமனை மற்றும் வகுப்பறை கட்டடங்கள்; திருப்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் டூல் & டை மேக்கர் என்ற புதிய தொழிற்பிரிவிற்கு 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிமனை மற்றும் வகுப்பறை கட்டடங்கள்

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மெஷினிஸ்ட் என்ற புதிய தொழிற்பிரிவிற்கு 81 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பணிமனை மற்றும் வகுப்பறை

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்திற்கு 1 கோடியே 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம்; என மொத்தம் 15 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறைக்கான கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

மேலும் தமிழகத்தில் உள்ள 53 தொழிற் பள்ளிகளுக்காக மெக்கானிக் மோட்டார் பயிற்சி துறையில் பயிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க 5 கோடியே 98 லட்சம் செலவில் 53 மின்சார வாகனங்கள் திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திறந்து வைத்தார்.