Tamil Nadu Government plans to farmers
Tamil Nadu Government plans to farmers

விவசாயிகளின் நலனுக்காக தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேசியுள்ளார்.

Tamil Nadu Government plans to farmers : தமிழகத்தில் கரோனா வைரஸ் தாக்கம் உச்சத்தில் இருந்தாலும் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளால் இதுவரை இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்த கொரோனா பேரிடர் காலத்தில் விவசாயிகள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதில் தமிழக அரசு மிகவும் தெளிவாக பணியாற்றி வருகிறது. இதற்காக பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செயல்படுத்தி வருவதாக தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் முதல் லாக் டவுன் தொடங்கிய போதே தமிழக முதல்வர் விவசாயிகளின் பிரச்சனைகளை தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.

காய்கறிகளை விவசாயிகள் நேரடியாக நுகர்வோர்களுக்கு விற்பனை செய்வதில் இருந்து எம்.ஜி.என்.ஆர்.இ.ஜி.ஏ தொழிலாளர்களை குடிமராமத்துக்கு பி.டபிள்யூ.டி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பயன்படுத்துவது வரை விவசாயத்தில் கவனம் செலுத்தப்பட்டது என தெரிவித்துள்ளார்.

நீர்நிலைகளை பாதுகாக்கும் குடிமராமத்து திட்டம் தமிழகம் முழுவதும் 80 சதவீதம் நிறைவடைந்து இருப்பதாகவும் மீதமுள்ள 20% வடகிழக்கு பருவமழைக்கு உள்ளாகவே முடிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக பெரும்பாலான ஏரிகள் மற்றும் நீர் நிலைகளில் நீர் வளம் நிறைந்து காணப்படுகிறது. மேலும் கேரளா கர்நாடகா ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கிடைக்கும் உபரி நீரை தகுந்த நேரத்தில் விவசாயிகளுக்கு திறந்து விட்டதால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிக அளவில் நெல், காய்கறி பழங்கள் மற்றும் உணவுப் பொருட்களின் உற்பத்தி அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.

காய்கறிகளை விவசாயிகளே நேரடியாக நுகர்வோர்களுக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டதால் பல விவசாயிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

உணவு தானிய சாகுபடியின் கீழ் விவசாயிகளுக்கு பெரிய பகுதியை ஈடுகட்ட அரசு உதவியது, மேலும் இது காவிரி டெல்டாவில் மட்டுமல்லாமல், மதுரை போன்ற மாவட்டங்களிலும் கொள்முதல் மையங்களின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கியது.

ஆம் 125 ஆக இருந்த கொள்முதல் மையங்கள் தற்போது 250 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சிக்கு ரூபாய் 70 கோடி.. தமிழக அரசின் அடுத்த அதிரடி திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி!

அதேபோல் தமிழகத்தில் அயல்நாட்டு முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் இளைஞர்களின் வேலைவாய்ப்பு அதிகரிக்கப்பட்டுளளது என தெரிவித்துள்ளார்.

தொற்று நோயை எவ்வாறு கையாள்வது? பொருளாதாரத்தை எவ்வாறு புதுப்பிப்பது என்பதை தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக செயல்படுகிறது என தெரிவித்துள்ளார்.

கொரானா சிகிச்சையில் தமிழக அரசின் செயல்பாடுகளால் மீட்க விதிதான அதிகரிக்கப்பட்டுள்ளது உயிரிழப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ளது என அமைச்சர் ஆர் பி உதயகுமார் கூறினார்.

மேலும் தமிழக முதல்வர் அம்மா கோவிட் 19 வீட்டு பராமரிப்பு திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார். வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்காக இந்தியாவில் முதல்முறையாக அமல்படுத்தப்பட்டுள்ள திட்டம் தான் இது.

இத்திட்டத்தின் கீழ் வீட்டு தலைமையில் உள்ளவர்களை கண்காணிக்க 20 பேர் கொண்ட மருத்துவக்குழு சுழற்சி முறையில் இயங்கும்.

இந்தத் திட்டத்தின் கீழ் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நோயாளிகளுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர் கருவி, வெப்பமானி, வைட்டமின் மாத்திரைகள், 14 முகக்கவசங்கள், கிருமிநாசினி அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். இந்த அம்மா கோவிட்-19 வீட்டு பராமரிப்பு திட்டத்தில், ரூ. 2,500 செலுத்தி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்கள் பயன் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தை தமிழக முதல்வர் இன்று தமிழகம் முழுவதும் அமல்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.