Tamil Nadu Government Announcement on Colleges Exam
Tamil Nadu Government Announcement on Colleges Exam

காலேஜ் மாணவர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

Tamil Nadu Government Announcement on Colleges Exam : கொரானா வைரஸ் பரவல் காரணமாக தற்போது இந்தியாவில் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில் நாளுக்கு நாள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இதனால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ் என அறிவித்தனர்.

அதைப்போல் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் ஒருசில தேர்வுகளில் மட்டும் அனைவருக்கும் தேர்ச்சி என அறிவித்தனர்.

தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் தல அஜித்.. பாராட்டித் தள்ளிய முக்கிய அதிகாரி (வீடியோ)

ஆனால் கல்லூரி தேர்வுகள் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது அது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கல்லூரி இறுதி பருவத் தேர்வுகள் தவிர மற்ற அனைத்து தேர்வுகளையும் ரத்து செய்ய உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

யுஜிசி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு வழிகாட்டுதலின் பேரில் கல்லூரி பருவத் தேர்வுகளை ரத்து செய்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்த விரிவான அரசாணையை வெளியிட உயர் கல்வித் துறைக்கும் அவர் ஆணையிட்டுள்ளார்.

தமிழக முதல்வரின் இந்த அதிரடி உத்தரவால் கல்லூரி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.