Tamil Nadu Corona Current Status
Tamil Nadu Corona Current Status

தமிழக அரசின் அதிரடி நடவடிக்கைகளால் சென்னையில் குறைவான பாதிப்பு கிடுகிடுவென குறைந்து வருகிறது.

Tamil Nadu Corona Current Status : இந்தியாவில் தற்போது கொரானா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று மட்டும் இந்தியா முழுவதும் 64 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை நேற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,808 ஆகவும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 118 ஆகவும் பதிவானது.

இதனால் தமிழகத்தின் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 2,90,907 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 986 ஆக பதிவாகியுள்ளது. 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழக அரசு எடுத்துவரும் மூன்று விதமான நடவடிக்கைகளால் சென்னையில் ஒவ்வொரு நாளும் வழக்குகள் தற்போதைய ஆயிரத்துக்கும் குறைவாக தொடங்கியுள்ளது.

மேலும் இதுவரை 2 லட்சத்து 32 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதால் 53,481 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று சென்னையைச் சுற்றியுள்ள செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் சேர்த்து 2,086 வழக்குகளும் 38 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

54 வயதில் இப்படியா?? மிரட்டலான சிக்ஸ் பேக்குடன் புதிய லுக்கில் விக்ரம், அவருக்குப் போட்டியாக துருவ் – இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

அதே போல் தமிழகத்தின் 10 தென் மாவட்டங்களில் 1,181 பேர் பாதிக்கப்பட்டதோடு 34 பேர் உயிரிழந்துள்ளனர். வட மாவட்டங்களில் 847 பேர் பாதிப்புக்குள்ளாக 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு மாவட்டங்களில் 474 புதியதாக பாதிக்கப்பட்டுள்ளனர், 20 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய மாவட்டங்களில் 659 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7 பேர் கொரானாவால் பலியாகியுள்ளனர்.

மேலும் கொரோனா வைரஸ் பரிசோதனை அதிகம் செய்த மாநிலங்களின் பட்டியலில், தமிழகம் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 31,55,619 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தகவல் தெரிவித்துள்ளது.