Tamil Nadu CM Thanks to PM
Tamil Nadu CM Thanks to PM

தமிழரின் பெருமைகளைப் பேசும் நூல்களில் ஒன்றான திருக்குறள் பற்றி பிரதமர் பேசியதற்கு நன்றி தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

Tamil Nadu CM Thanks to PM : தமிழர்களில் பெருமையைப் பேசும் நூல்கள் என பலவற்றை கூறிக்கொண்டே செல்லலாம். திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, ராமாயணம், மகாபாரதம் என பல நூல்கள் உள்ளன.

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் திருக்குறளை பற்றி பதிவு ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும்.

தெய்வப்புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன்.

திருமணமான பத்தே நாளில் கணவனை பிரிந்தது ஏன்? நீண்ட இடைவெளிக்கு பிறகு காரணத்தை கூறிய ரம்யா.!

இதனையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் முதல்வருக்கு நன்றி கூறி பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் உலகப் பொதுமறையாம் திருக்குறள் ஒரு நீதி நூல் மட்டுமின்றி, வாழ்வியல் நூலாகவும் திகழ்கின்றது.‌ இனம், மொழி, நாடு போன்ற எல்லைகளைக் கடந்து அனைத்து தரப்பு மக்களின் வாழ்வினை நெறிப்படுத்தும் உயரிய நூலாகும். உலகிலேயே அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில், தெய்வப் புலவர் திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளும் ஒன்றாகும். இத்தகைய சிறப்புமிக்க திருக்குறளை இந்தியா முழுவதுமுள்ள இளைஞர்கள் படித்து பயன்பெற வேண்டும் என்று மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கூறியிருப்பது தமிழுக்கும், தமிழருக்கும் பெருமை சேர்ப்பதாகும் என கூறியுள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற ஓராண்டிலேயே திருக்குறளை குஜராத்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட நூலை வெளியிட்டிருந்தார்.

அந்த விழாவில் திருக்குறளை யுனிவர்சல் வேதா என குறிப்பிட்டு இருந்தார். அதாவது ஜாதி மதம் இனம் நாடு மொழி என அனைத்தையும் கடந்து அனைவருக்கும் நல்லது கூறும் நூல் என்பது தான் அதன் பொருள்.

அதேபோல் நம்பர் 22 ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு மலேசியா சென்றிருந்தபோது அங்கே 15 ஆயிரம் பேர் கூடியிருந்த நிகழ்ச்சியில் முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து அகநக நட்பது நட்பு என்ற குரளோடு தன்னுடைய உரையை தொடங்கினார்.

சச்சின் படத்தின் இரண்டாம் பாகம் – இயக்குனர் வெளியிட்ட தகவல்

இதேபோல் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 18-ஆம் தேதி சென்னை திருவிடந்தை அருகிலுள்ள ஊரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத் தூறும் அறிவு என்ற குறளை கூறி தன்னுடைய உரையைத் தொடங்கினார்.

அதுமட்டுமல்லாமல் செப்டம்பர் 2019 ஆம் ஆண்டின் 28ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் கூட்டத்தில் பேசிய போது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பெருமை வாய்ந்த தமிழ் வாசகத்தை கூறி தன்னுடைய உரையை தொடங்கியிருந்தார்.

இதுபற்றியும் நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பேசி வருகின்றனர்.