எங்க ஆட்சியில ஒரு குறையும் சொல்ல முடியல - முதல்வர் பழனிச்சாமி பெருமிதம் | Edappadi Palaniswami

Tamil nadu CM EPS Press Meet in Madurai Airport : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. மக்களுக்கு என்ன தேவை என்பதை அறிந்து செயலாற்றி வருகிறது.

மேலும் தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக முதல்வர் பழனிசாமி ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

அந்தவகையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்து அம்மாவட்டத்திற்கான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். முழுமையாக முடிவடைந்த திட்டங்களை திறந்து வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆய்வு செய்துவிட்டு திரும்பியபோது மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கொரானா சிகிச்சையில் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வாய்ப்பு இருக்கிறதா என கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாய்ப்புகள் அமைந்தால் நிச்சயம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

மேலும் வேளாண் மசோதா, திமுகவின் எதிர்ப்புகள், லாக்கப் மரணம், திமுகவின் இணைய வழி உறுப்பினர் சேர்க்கை குறித்து செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார்.