YouTube video

Tamil Nadu CM Edappadi Palanisamy About Kalvi Tholaikatchi

தொலைக்காட்சியில் கல்வி.. இந்தியாவுக்கே முன்னோடியாக திகழும் தமிழகம் – இரட்டிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கருத்து.!!

கல்வி தொலைக்காட்சி என்ற தொலைக்காட்சி சேனல் மூலம் தமிழகம் கல்வி முறையில் முன்னோடியாக திகழ்வதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

தமிழக மாணவர்களுக்கு தொலைக்காட்சி சேனல் வழியாக பாடம் கற்பிக்கும் முறை கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26ம் தேதி கல்வி தொலைக்காட்சி என்ற புதிய சேனலை தொடங்கி வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

தற்போது இந்த கல்வி சேனல் தொடங்கி ஒரு வருடம் ஆகி விட்ட நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இது குறித்து பேசியுள்ளார்.

கல்விச்செல்வம் காலத்தால் அழியாதது, பாறைக்கு அடியில் வெறும் தங்க கட்டியாக இல்லாமல் அதனை பயன்படுத்தி பளபளவென ஜொலிக்கும் தங்கமாக மாற்ற வேண்டும் என்ன அறிஞர் அண்ணா கூறினார்.

அவருடைய சொல்லுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் அம்மா தலைமையிலான அரசு இலவச கல்வி, இலவச பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், ஸ்கூல் பேக், காலணிகள், சீருடைகள், மிதிவண்டி, லேப்டாப், கல்வி ஊக்கத்தொகை என பல்வேறு சலுகைகளை வழங்கி வந்தார். அவர் தொடங்கிய இந்த திட்டங்களை அதிமுக அரசு தற்போது வரை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

இதனை நன்கு அறிந்த நான் கடந்த வருடம் இதே தினத்தில் ( ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி ) பள்ளி மாணவர்களுக்கு என புதிய கல்வி தொலைக்காட்சி என்ற சேனலை தொடங்கி வைத்தேன்.

இதுவரை இல்லாத அளவு கொரானா வைரஸால் உலக நாடுகள் அனைத்தையும் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையிலும் தமிழக மாணவர்களுக்கு இந்த தொலைக்காட்சி சேனல் மூலமாக கல்வி பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

இதை ஒரு சவாலாக ஏற்று பல்வேறு மாற்றங்களுடன் தமிழக அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பள்ளிகளுக்கான பாட அட்டவணைப் போன்று கல்வித் தொலைக்காட்சிக்கான ஒளிபரப்பு அட்டவணை, வகுப்பு வாரியாக இரண்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் ஆசிரியர்களை கொண்டு வீடியோ பதிவுகள் உருவாக்கப்பட்டு அவை ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.

தொலைக்காட்சியில் காண தவறிய மாணவர்கள் மறுநாள் யூடியூப் பக்கத்தில் பார்த்து பயன் பெறும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் கல்விமுறையில் இந்தியாவிற்கே தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்பது தனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.

மேலும் கல்வி தொலைக்காட்சி சேனல் வெற்றிகரமாக ஓராண்டு நிறைவு செய்ததற்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன். மேலும் இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், கல்வித்துறை உயர் அதிகாரிகள், ஆசிரியப் பெருமக்கள் என அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

தமிழக மாணவ மாணவர்களின் நலன் கருதி என் தலைமையிலான அரசு இது போன்ற எண்ணற்ற பல சாதனைகளை தொடர்ந்து படைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.