YouTube video

Tamil Nadu CM Edappadi K. Palaniswami Visit Fruit Sales Man

EPS Visit in Thiruvarur District : தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பேரிடர் காலத்தில் அதிமுக அரசு சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறது.

மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதோடு மாவட்டங்களின் வளர்ச்சிப் பணிகளுக்காக புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார்.

அந்த வகையில் இவர் சமீபத்தில் திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்தார். அப்போது திருவாரூரிலிருந்து தஞ்சாவூரை நோக்கி காரில் சென்று கொண்டிருந்த போது யாரோ ஒருவர் ஒரு காகிதத்தை சுருட்டி காருக்குள் தூக்கி எறிந்து விட்டு சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தபோது அவர் நீடாமங்கலத்தில் பழ வியாபாரம் செய்து வருபவர், அவர் பெயர் செல்வராஜ் என்பது தெரிய வந்தது.

வயல் வெளிக்கு சென்று விவசாய தொழிலாளர்களுக்கு முகக்கவசம் வழங்கிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

இதனையடுத்து தஞ்சாவூர் சென்றடைந்த முதல்வர் அந்த நபரை நேரில் அழைத்து வருமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த நபரும் முதல்வரை சந்திப்பதற்காக தஞ்சாவூர் சென்றிருந்தார்.

அப்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அந்த நபரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றது மட்டுமல்லாமல் தம்பி மனுவை கையில் தான் கொடுக்கணும் இப்படி தூக்கி எறியக் கூடாது என அட்வைஸ் செய்து அனுப்பி வைத்தார்.

அப்படி அந்த பேப்பரில் என்ன தான் எழுதி இருக்கு என சம்பந்தப்பட்ட நபரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது நான் தான் உங்கள் 5 தெய்வங்கள் குறித்த மந்திரத்தை எழுதி வைத்திருந்தேன். அதோடு என்னுடைய பெயரையும் போன் நம்பரை எழுதி வைத்திருந்தேன்.

முதல்வர் அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக இறங்குவார் என நான் எதிர்பார்த்தேன் ஆனால் அவர் இறங்கவில்லை அதனால் காரில் தூக்கி எறிந்து விட்டேன்.

2021 சட்டசபைத் தேர்தலில் தளபதி விஜய் போட்டியா? டெல்லி வழக்கறிஞருடன் நடந்த ரகசிய ஆலோசனை – வெளியான முக்கிய தகவல்கள்!

நான் விபத்து ஒன்றில் சிக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். அதனை நான் கடவுள் கொடுத்த மறுபிறவியாகவே நினைக்கிறேன். அதன் பிறகு நடக்கப் போகும் விஷயங்கள் எனக்கு முன் கூட்டியே தெரிய தொடங்கியது.

இதுபோன்று ஒரு நோய்த்தொற்று ஏற்படும் என என்று எனக்கு ஏற்கனவே தெரிந்தது ஆனால் நான் சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என்பதால் நான் இதை வெளியில் சொல்லவில்லை.

அடுத்த ஐந்து ஆண்டும் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான் முதல்வராக பதவி வகிப்பார். திருச்செந்தூர் முருகப்பெருமான், சிவபெருமான், திருச்சி மலைக்கோட்டையில் உள்ள விநாயகப் பெருமான், சமயபுரம் மாரியம்மன் ஆகிய கடவுள்களுக்கு யாகம் நடத்த வேண்டும் என அருள்வாக்கு கூறியதாக தெரிவித்துள்ளார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.