YouTube video

Tamil Nadu CM Edappadi K. Palaniswami Latest Announcement

இந்திய அளவில் இரண்டாம் இடம் பிடித்த தமிழகம், இனி ரேஷன் கடைகளில் இதுவும் ஃப்ரீ – தமிழக முதல்வரின் அதிரடி அறிவிப்பு

இந்திய அளவில் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழகம் இரண்டாவது இடம் பிடித்துள்ளது என இன்வெஸ்ட் இந்தியா என்ற இணையதளம் தெரிவித்துள்ளது.

Tamilnadu Govt New Order on Ration Cards : தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தலைமையிலான அதிமுக இரண்டாவது முறையாக சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று ஆட்சியை தக்க வைத்தது.

தற்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்காக முதலீட்டாளர்களுக்கு பெரிய அளவில் சலுகைகளை அளித்து தமிழகம் பக்கம் ஈர்த்து வருகிறது. இதன் காரணமாக இனி வரும் காலங்களில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி பெரிய அளவில் இருக்கும் எனவும் வேலைவாய்ப்புகள் கிடுகிடுவென அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக அரசு எடுத்து வரும் சிறப்பான நடவடிக்கைகள் காரணமாக நேற்று முதலீடுகள் குறித்த நம்பகத்தன்மை வாய்ந்த இன்வஸ்ட் இந்தியா என்ற இணையதளத்தில் தமிழ்நாடு மாநிலம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இது குறித்த தகவல் அந்த இணையதளத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

இது ஒருபுறமிருக்க தமிழகத்தில் வரும் நவம்பர் மாதம் வரை அனைத்து ரேஷன் கடைகளிலும் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ கோதுமையை இலவசமாக வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் ஒருவர் பெறும் கோதுமையின் அளவிற்கு இணையாக இலவச இலவச அரிசி அளவில் எடை குறைத்து கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு அட்டைதாரர்கள 2 கிலோ கோதுமை வாங்கினால் அவருக்குரிய இலவச அரிசி இரண்டு கிலோ குறைத்து அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் லாக் டவுன் அறிவிக்கப்பட்டதில் இருந்தே தமிழக மக்களுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.