YouTube video

Tamil Nadu CM Edappadi K Palanisamy Speech in Erode : ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகளில் கலந்து கொண்ட முதல்வர் பழனிசாமி அத்திக்கடவு அவினாசி திட்டம் குறித்துப் பேசியுள்ளார்.

குடிமராமத்து என்ற அற்புதமான திட்டத்தை அம்மா துவங்கி வைத்தார். அந்த திட்டம் தொடர்ந்து அதிமுக அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் மூலமாக இதுவரை பல ஆண்டுகளாக தூர் வாராமல் இருந்த 14 ஆயிரத்துக்கும் அதிகமான ஏரிகளில் தூர்வாரும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 26 ஆயிரம் ஏரிகள் உள்ளன. கிராமங்களில் உள்ள ஏரி, குளம், குட்டைகளை தூர்வார கடந்தாண்டு ரூபாய் 250 கோடி ஒதுக்கப்பட்டு இருந்தது. இதன் மூலம் பருவ காலங்களில் பெய்யும் மழை நீரை வீணாக்காமல் ஏரி குளங்களில் சேகரித்து பாசனத்திற்கு பயன்படுத்த முடியும்.

பருவமழை காலங்களில் பெய்கின்ற மழைநீர் வீணாகி கடலில் கலப்பதை தவிர்க்க அம்மா அத்திக்கடவு அவினாசி என்ற திட்டத்தை ரூபாய் 1652 கோடி செலவில் தொடங்கி வைத்தார். தற்போது வரை 30 சதவீதம் இந்த திட்டத்தின் பணிகள் முடிவடைந்துள்ளன.

2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் இத்திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார். மக்களுக்கும் விவசாயிகளுக்கும் இதன் மூலம் நீர் வழங்குவதால் 24 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும் என கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் பருவ காலங்களில் பெய்யும் மழை நீர் வீணாவதை தவிர்க்க பவானிசாகர் அணை முதல் பவானி வரை ஏழு இடங்களில் தடுப்பணை கட்டுவதற்கு திட்டமிடப்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

மேலும் பவானிசாகர் அணையிலிருந்து கால்வாய் மூலம் பல ஆண்டுகளாக நீர்ப்பாசனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கால்வாய்களை புனரமைக்கும் பணி தொடங்கும் என கூறியுள்ளார்.

குண்டாற்றின் தடுப்பணை கட்டும் பணி நிறைவேற்றப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஈரோடு மாவட்ட மக்களுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.

இவர் அத்திக்கடவு அவினாசி திட்டம் நிச்சயமாக செயல்படுத்தப்படும் எனக்கூறியது வயிற்றில் பாலை வார்த்திருப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.