YouTube video

Tamil Nadu Back to Normal Life : சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தாக்குதலிலிருந்து இது இந்தியாவும் தப்பவில்லை.

மேலும் தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நான்கரை லட்சத்தை தாண்டியுள்ளது. தமிழக அரசு அளித்து வரும் தரமான சிகிச்சை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கொரோனாவில் இருந்து இதுவரை 4,23,231 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தற்போது 49,203 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தொடர்ந்து உச்சத்தில் இருந்த கொரானா பாதிப்பிற்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 53 நாட்களுக்கு பிறகு 50 ஆயிரத்திற்கும் கீழாக குறைந்துள்ளது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு – சுகாதாரத்தறை வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை.!

தமிழகத்தில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருபவர்களை விட குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது மிகவும் கவனிக்கத்தக்க ஒன்று.

மேலும் தமிழக அரசு அம்மா ‘கோவிட்-19’ வீட்டு பராமரிப்பு திட்டத்தில் முதல் நிலை நோயாளிகள் வீட்டிலிருந்து சிகிச்சை பெறும் வசதி, நடமாடும் கொரோனா பரிசோதனை மையம், வீடுகளில் சென்று நேரடியாக உடல் வெப்பநிலையைப் பரிசோதனை செய்தல், கொரோனா சிறப்புச் சிகிச்சை மையம் என தமிழக அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கை மூலம் கொரோனா பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கைகளின் காரணமாக சென்னையில் தொடர்ந்து 7 நாட்களாக, கொரோனா பாதிப்பு 1000-க்கும் கீழாக குறைந்துள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைந்துள்ளது.

அதேபோல் தமிழகத்தில் 10 வது நாளாக 6 ஆயிரத்திற்கும் கீழ் பாதிப்பு பதிவாகி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் வெகு விரைவில் தமிழகம் கொரானா இல்லாத மாநிலமாக மாறும் என எதிர்பார்க்கலாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.