Tamil Movies Release List in April

ஏப்ரல் மாதத்தில் மூன்று டாப் ஹீரோக்களின் படங்கள் மோதிக் கொள்ள இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

Tamil Movies Release List in April : தமிழ் சினிமாவில் கொரானா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஒரு வருடமாக பெரிய அளவில் படங்கள் ரிலீசாகாமல் கிடப்பில் இருந்து வருகிறது.

இதனையடுத்து தீபாவளி முதல் திரையரங்குகள் 50 சதவீத இருக்கையுடன் இயங்கலாம் என அறிவிப்பு வெளியானது. இருந்தாலும் சூர்யாவின் சூரரைப்போற்று நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட திரைப்படங்கள் OTT வழியாக வெளியாகின.

அதன்பின்னர் மாஸ்டர் திரைப்படம் 100 சதவீத இருக்கைகளுடன் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. தமிழக அரசும் 100% இருக்கைக்கு அனுமதி அளித்து பின்னர் எழுந்த எதிர்ப்பால் 50 சதவீதமாக குறைந்தது.

மாஸ்டர் திரைப்படமும் திட்டமிட்டபடி வெளியாகி 50 சதவீத இருக்கை அனுமதியுடன் வசூலில் மாஸ் காட்டலாம் என்பதை நிரூபித்தது.

இந்தப் படங்களைத் தொடர்ந்து ஏப்ரல் மாதத்தில் முன்னணி நடிகர்களின் படங்கள் ரிலீஸக்கு வரிசை கட்டி நிற்கின்றன.

அதாவது தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் திரைப்படம் ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ளது.

இது மட்டுமல்லாமல் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள டாக்டர் திரைப்படமும் ஏப்ரல் ரிலீஸ் என தகவல் கிடைத்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் வெளியாக உள்ள இந்த மூன்று படங்களில் எந்த படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றி பெறப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்த மூன்று படங்களில் நீங்க எதுக்கு வெயிட்டிங் என்பதை எங்களோடு கமெண்ட்ல ஷேர் பண்ணுங்க.